• தஞ்சாவூர் தேர்விழா மின்சார விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு டாக்டர் பாரிவேந்தர் M.P இரங்கல்

  3 சிறுவர்கள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகவும் துயருற்றோம்.

  பொதுநிகழ்ச்சிகள் மற்றும் ஊர் கோவில் திருவிழாக்கள் ஏற்பாடு செய்யும்போது மேற்கொள்ள வேண்டிய விதிமுறைகளையும் – பாதுகாப்பு நடவடிக்கைகளையும் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் பொதுமக்களிடம் தெரியபடுத்தி அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருந்தால் இனிவரும் காலங்களில் இதுபோன்ற கோர விபத்துக்களை தவிர்க்கலாம்.

  இவ்விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டு, படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்கள் விரைவில் பூரண நலம் பெறவேண்டுமென பிரார்த்திக்கின்றேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரண நிதியை விரைந்து அளிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

  வருத்தங்களுடன்,

  டாக்டர் பாரிவேந்தர் M.P

  பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி