• ஐஜேகே தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து அவர்கள் விடுத்திருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

  வசந்தகாலம் தொடங்குவதை தமிழ் மண்ணுக்கு எடுத்துக் கூறும் பொருட்டு சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டு திருநாளாக கொண்டாடப்பட்டு வருகின்றது. திருக்கணித பஞ்சாங்கத்தின்படி நாளை சுபகிருது ஆண்டு தொடங்கவுள்ளது. சுபகிருது என்றால் அதிக நன்மைகள் நிறைந்த ஆண்டு என்று பொருள்.

  தமிழகம் மட்டுமல்ல, உலகெங்கும் உள்ள தமிழர்கள் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டும், நாம் அனைவரும் தமிழர்கள் என்ற உணர்வோடும், வாழவேண்டும்.  தமிழர்கள் வாழ்வில் புத்துணர்வும், புதிய நம்பிக்கையும், மகிழ்ச்சியும் ஏற்படுவதற்காக அயராது உழைப்போம் என்று இந்நாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்றுக்கொள்வோம். நாளை (14.04.2022) பிறக்கவுள்ள இப்புத்தாண்டு தமிழர்களின் உள்ளங்களில் நம்பிக்கை, நற்சிந்தனை, வெற்றி ஆகியவற்றை தழைத்தோங்கச் செய்து, ஒவ்வொருவரின் உள்ளங்களிலும் மகிழ்ச்சி நிறையட்டும் எனக்கூறி, உலகெங்கிலும் வாழும் சகோதர – சகோதரிகள் அனைவருக்கும் இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.  

  வாழ்த்துக்களுடன்,

  டாக்டர் ரவிபச்சமுத்து

  தலைவர்

  இந்திய ஜனநாயகக் கட்சி.