• சுபகிருது ஆண்டில் தமிழர்தம் வாழ்வில் வளர்ச்சியும் – மகிழ்ச்சியும், மனநிறைவும் பொங்கிப் பெருகட்டும் டாக்டர் பாரிவேந்தர் M.P. அவர்கள் விடுத்திருக்கும் - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துச்செய்தி

  ஆண்டுதோறும் சித்திரைத் திங்கள் முதல் நாளன்று  தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் பிளவ ஆண்டு முடிவடைந்து, நாளை (14.04.2022) சுபகிருது ஆண்டு தொடங்கவுள்ளது. 

  கடந்த இரண்டு வருடங்களாக  பெரிய தொழிலதிபர்கள் முதல் சாமானிய மக்கள் வரை அனைவரது வாழ்வாதாரத்தையும் – பொருளாதாரத்தையும் புரட்டிப்போட்ட கொரோனாவின் கோர தாக்கத்தில் இருந்து மீண்டெழுந்து அனைவரது வாழ்விலும் வளமும் – நலமும் பெறவேண்டும்.

  பிறக்கவிருக்கின்ற தமிழ் புத்தாண்டு உலக அளவிலே தமிழர்களுக்கு வளர்ச்சி தரக்கூடிய ஒரு நாளாக, தமிழ் சமுதாயத்திற்கு உயர்வு தரக்கூடிய ஒரு நாளாக அமைய வேண்டும். புத்தாண்டில் தமிழகம் வளர்ச்சி பாதையில் தொடர்ந்து பீடு நடை போட்டு, தமிழர்தம் வாழ்வில் மகிழ்ச்சியும், மனநிறைவும் பொங்கி பெருகட்டும்  எனக்கூறி, நாளை தமிழ் புத்தாண்டை கொண்டாடவுள்ள, உலகெங்கும் வாழும் அனைத்து சகோதர – சகோதரிகளுக்கும் என் உளம் கனிந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

  வாழ்த்துக்களுடன்,

  டாக்டர் பாரிவேந்தர் M.P

  பெரம்பலூர் நாடளுமன்றத் தொகுதி.