• IJK தலைவர் ரவிபச்சமுத்து அவர்கள் விடுத்திருக்கும் - ‘யுகாதி’ திருநாள் வாழ்த்துச்செய்தி

    திராவிட மொழிகள் குடும்பத்தின் மூத்த, முதன்மை மொழியான தமிழ் மொழியோடு மிக நெருங்கிய தொடர்புடைய தெலுங்கு, கன்னட மொழிகள் பேசும் மக்கள்,  தங்களின் புத்தாண்டு நாளாக யுகாதித் திருநாளை கொண்டாடி மகிழ்கின்றனர்.

    வா‌ழ்‌க்கை‌யி‌ன் த‌த்துவ‌த்தை உண‌ர்‌த்து‌ம் ‌விதமாக யுகாதி அன்று ஆறு சுவைகள் கொண்ட உணவாக யுகாதி பச்சடி செய்வார்கள். வாழ்க்கை என்பது மகிழ்ச்சி, கவலை, கோபம், அச்சம், சலிப்பு, ஆச்சர்யம் கலந்தது என்பதை உணர்த்தும் வகையில், கசப்புக்கு வேப்பம்பூ, துவர்ப்புக்கு மாங்காய், புளிப்புக்கு புளி பானகம், உரைப்புக்கு மிளகாய் அல்லது மிளகு, இனிப்புக்கு வெல்லம் ஆகிய ஆறு சுவைகள் கொண்ட பச்சடி செய்து இறைவனுக்கு படைத்து அனைவருக்கும் உணவில் பரிமாறுவா‌ர்க‌ள்.

    தமிழ்நாட்டில் யுகாதி பண்டிகை சகோதரத்துவத்தை வளர்க்கும் திருநாள் ஆகும்.  தமிழர்களுக்கும், தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கும் இடையிலான ஒற்றுமையும், சகோதரத்துவமும் ஆல்போல் தழைத்தோங்க இந்த நன்னாளில் நாம் அனைவரும் உறுதியேற்க வேண்டும் எனக்கூறி, நாளை (02.04.2022) யுகாதித் திருநாளைக் கொண்டாடும்  அனைவருக்கும் இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் என்னுடைய மனமார்ந்த யுகாதித் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

    வாழ்த்துக்களுடன்,

    ரவிபச்சமுத்து

    தலைவர்

    இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)