• நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்கும், வளமான இந்தியாவை உருவாக்கவும் இணைந்து செயல்படுவோம் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பாரிவேந்தர் M.P. அவர்கள் விடுத்திருக்கும் ‘யுகாதித் திருநாள்’ வாழ்த்துச் செய்தி

    கிருஷ்ண அவதாரம் முடிந்து கலியுகம் தொடங்கிய நாளை ‘யுகாதி’ என கூறுகின்றோம். பிரம்மன் உலகத்தை படைத்த நாள், வசந்த கால ஆரம்ப நாள் யுகாதித் திருநாளாகும்.

    தமிழகத்தில் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள், சகோதர- சகோதரிகளாய் அவர்தம் இன்ப - துன்பங்களில் பங்கேற்று, தொழில் – வணிகம் – கல்வி - கலை போன்ற பல்வேறு துறைகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு ஒற்றுமையுடன் வாழ்ந்து வருவது தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.

    பேசும் மொழிகளால் வேறுபட்டிருந்தாலும் தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம் மற்றும் கேரள மக்கள் கலாச்சாரத்தாலும், பண்பாட்டாலும் ஒருமித்த உணர்வோடு வாழ்ந்து வருகிறோம். இந்த மகிழ்ச்சியான தருணத்தில் கலாச்சாரம், பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்கும், வளமான இந்தியாவை உருவாக்கவும் இணைந்து செயல்படுவோம் எனக்கூறி,  யுகாதித் திருநாளைக் கொண்டாடும் தெலுங்கு மற்றும் கன்னட சகோதர - சகோதரிகளுக்கு இனிய ‘யுகாதித் திருநாள்’ நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    வாழ்த்துக்களுடன்,

    டாக்டர் பாரிவேந்தர் M.P,

    பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி