• நம் வாழ்வில் நீக்கமற கலந்திருக்கும் பெண் இனத்தைப் போற்றி பாதுகாப்போம் - நம் வாழ்வில் நீக்கமற கலந்திருக்கும் பெண் இனத்தைப் போற்றி பாதுகாப்போம்.

  தாயாக – மனைவியாக – தோழியாக – சகோதரியாக – மகளாக  என்று நம் உறவின் அனைத்து பரிணாமங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவர்கள்தான் பெண்கள்  ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருக்கின்றாள் என்று சொல்லப்படுவது இதனால்தான்.

  “மங்கையராய் பிறப்பதற்கோர் மாதவம் செய்திடல் வேண்டும்” எனும் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் கவிவரிகளுக்கு உயிர் கொடுக்கும் விதமாக பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும்  பெண்களின் அபரிமிதமான முன்னேற்றத்தினை நமக்கு கண்முன்னே காட்டும் வளர்ச்சியாகும்.

  இத்தகு சிறப்பு வாய்ந்த மகளிரை பெருமைபடுத்தும் வகையில் ஆண்டுதோறும் மார்ச் 8-ஆம் நாள் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.  பெண்களின் மகத்தான சாதனைகளை கொண்டாடும் வகையில், உலக அளவில் இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது. நம் வாழ்வில் நீக்கமற கலந்திருக்கும் பெண்மையை நாம் போற்றி பாதுகாப்போம் எனக்கூறி, உலகெங்கும் வாழும் மகளிர் அனைவருக்கும் எனது உளம் கனிந்த மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

  வாழ்த்துக்களுடன்

  டாக்டர் பாரிவேந்தர் M.P

  நாடாளுமன்ற உறுப்பினர்,

  பெரம்பலூர்  தொகுதி