• மத்திய அரசின் 2022 – 23-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நாட்டை வளர்ச்சிப் பாதையை நோக்கி அழைத்துச்செல்லும் டாக்டர் பாரிவேந்தர் M.P அவர்கள் வரவேற்பு

  2022-23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையினை மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீத்தாராமன் அவர்கள் இன்று (01.02.2022) நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்துள்ளார். சென்ற ஆண்டினைப்போலவே இந்த ஆண்டும் காகிதம் இல்லாத டிஜிட்டல் வடிவில்  நிதிநிலை அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

  இன்று வெளியிடப்பட்ட நிதிநிலை அறிக்கையில்,

  • நீண்டகாலக் கனவாக இருந்துவரும் கோதாவரி – கிருஷ்ணா – பெண்ணாறு – காவிரி நதிகளை இணைக்கும் திட்டம் இறுதி வடிவம் பெற்றது.
  • விவசாயிகளின் விளைபொருட்களுக்கான ஆதார விலையை உறுதிபடுத்த 2.75 லட்சம் கோடி ஒதுக்கீடு
  • 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை மாநில மொழிகள் ஊக்குவிக்கப்படும் என்ற அறிவிப்பு
  • நவீன தொழில்நுட்பத்தின் விளைவாக RBI மூலம் டிஜிட்டில் கரன்சி அறிமுகம்
  • டிஜிட்டல் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படும்
  • சிறுதொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் கடன் வழங்கப்டும்
  • இயற்கை விவசாயத்தை நாடு முழுவதும் அமல்படுத்த வழிவகை செய்யப்படும்
  • 2022-23 ஆம் நிதி ஆண்டு சிறுதானிய வளர்ச்சிக்கான ஆண்டாக அறிவிக்கப்பட்டிருப்பது
  • நாடு முழுவதும் சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்த அதிக கவனம் செலுத்தப்படும்.
  • 68 சதவிகித ராணுவத்தளவாடங்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும்
  • இளைஞர்களுக்காக 60 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

  என்ற திட்டங்கள் நாட்டின்  வளர்ச்சியை மையமாகக் கொண்டு நவீன இந்தியாவை உருவாக்கும்  நோக்கத்தோடு தயாரிக்கப்பட்டதாகவே கருதுகின்றேன். அதனை செயல்வடிவத்திற்கு கொண்டுவருவதற்காக, முனைப்பான திட்டங்களை மக்களின் ஒத்துழைப்போடு மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் எதிர்பார்க்கின்றோம்.

  வாழ்த்துக்களுடன்,

  டாக்டர் பாரிவேந்தர் M.P

  பெரம்பலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்