• வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் ரத்து

    நாளை 06.02.2022 (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.00 மணிக்கு, சென்னை அசோக் நகர் கட்சித் தலைமை அலுவலகத்தில், சென்னை மாநகராட்சியின் வார்டுகளில் போட்டியிடவுள்ள  இந்திய ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது.

    கொரோனா பரவல் குறைந்து வரும் சூழலில், தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலை ஏற்கும் பொருட்டு, வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தை ரத்து செய்து - போட்டியிடும்  வேட்பாளர்களின் பெயர் பட்டியலை மட்டும் பத்திரிகைகள் மற்றும் செய்தியாளர்களுக்கு அனுப்பிவைக்கின்றோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

    இங்ஙனம்,

    கட்சி தலைமையகம்

    இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)