• ஐஜேகே தலைவர் திரு. ரவிபச்சமுத்து அவர்கள் பத்திரிகையாளர்கள் சந்திப்பு

  நாளை 28.01.2022 (சனிக்கிழமை) நன்பகல் 12.30 மணிக்கு, சென்னை

  அசோக் நகர் கட்சி தலைமை அலுவலகத்தில்,  இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் திரு ரவிபச்சமுத்து அவர்கள் பத்திரிகையாளர்களை சந்திக்க உள்ளார்.

   எதிர்கொள்ள இருக்கின்ற உள்ளாட்சித் தேர்தலில் ஐஜேகேவின் நிலைப்பாட்டைப் பற்றி கூறவுள்ளோம்.  இச்சந்திப்பில் கட்சியின் பொதுச்செயலாளர் திரு.பி.ஜெயசீலன், முதன்மை அமைப்புச் செயலாளர் திரு.எஸ்.எஸ்.வெங்கடேசன் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொள்ள உள்ளனர். எனவே தங்கள் பத்திரிகையின் செய்தியாளரை அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

  இங்ஙனம்,

  கட்சி தலைமையகம்

  இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)