• சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 125-வது பிறந்த தினத்தையொட்டி டெல்லியில் அவரது பிரமாண்டமான சிலையை பிரதமர் மோடி திறந்துவைக்கின்றார் - டாக்டர் பாரிவேந்தர் M.P. வரவேற்பு

  நேதாஜி என்று இந்திய மக்களால் பெருமையோடு அழைக்கப்படும் சுபாஷ் சந்திரபோஸ் மாபெரும் இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர் ஆவார். சுபாஷ் சந்திரபோஸ் ஒரிசா மாநிலத்தில் உள்ள கட்டாக் என்ற இடத்தில் 23.01.1897 ஆம் தேதி பிறந்தார். பெற்றோர் ஜானகிநாத்போஸ் – பிரபாவதி தேவி ஆவார்கள். 1919-ஆம் ஆண்டு லண்டன் சென்று ஐ.சி.எஸ் பட்டம் பெற்றார்.

  சுபாஷ் சந்திரபோஸ் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். சி.ஆர். தாஸ் அவர்களை அரசியல் குருவாக ஏற்றுக்கொண்டு சுதந்திர போரட்டத்தில் ஈடுபட்டார். சுபாஷ் சந்திரபோஸ் அவர்களுக்கு கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் அவர்கள் மரியாதைதைக்குரிய தலைவர் என்ற பொருளில் வழங்கப்படும் ‘நேதாஜி’ என்ற பட்டத்தை வழங்கினார்.

  பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டுகிறார் என குற்றம் சாட்டி 1940-ல் ஆங்கிலேய அரசு நேதாஜியைக் கைது செய்தது. 1941-ஆம் ஆண்டு சிறையிலிருந்து தப்பித்த நேதாஜி இந்திய தேசிய இராணுவத்திற்கு தலைமை தாங்கினார். பல வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட நேதாஜி ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதங்களைத் திரட்டினார். 1945-ல் நேதாஜியின்  இந்திய தேசிய இராணுவம் ஆங்கிலேயரிடம் தோல்வி கண்டது. ஆனால் நேதாஜியின் தீர்க்கதரிசனம் 15.08.1947-ல் நிறைவேறியது. இந்தியா சுதந்திரம் பெற்றது.

  மகத்தான சுதந்திரப்போராட்ட வீரர் நேதாஜி அவர்களுக்கு, டெல்லியில் இந்தியா கேட் பகுதியில் 28 அடி உயரமும் 6 அடி அகலமும் கொண்ட பிரமாண்ட சிலையை நாளை (23.01.2022) பாரதப் பிரதமர் மோடி அவர்கள் நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கின்றார். இந்த பெருமைக்குரிய நிகழ்வை வரவேற்று மகிழ்கின்றேன்.

  வாழ்த்துக்களுடன்,

  டாக்டர் பாரிவேந்தர் M.P

  பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி