• ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து அவர்கள் விடுத்திருக்கும் - ஆங்கில புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

  ஆதி அந்தம் இல்லாத கால வெள்ளத்தில் எழுந்து தணியும் அலையின் தோற்றமாக ஆங்கிலப் புத்தாண்டு வழக்கம்போல் மலர்கிறது. இளைஞர்கள் கொண்டாடும் இனிய திருவிழாவாக ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் விளங்கி வருகின்றது. பழையன கழிதலும் – புதியன புகுதலும் சமுதாய அமைப்புகளிலும், அரசியல் நிகழ்வுகளிலும் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள்.

  புதிய பாரதம் உதயமாக மாணவர்களும், இளைஞர்களும் தங்களை அர்ப்பணிக்க வேண்டும். கல்வியில் சிறந்த தமிழ்நாடு எனும் கூற்றினை தொடர்ந்து மெய்ப்பிக்க வேண்டும். அதற்கான வாய்ப்பினையும் – வசதியினையும் நம் அரசாங்கங்கள் செய்து தரவேண்டும்.

  கொரோனா வைரசின் பலதரப்பட்ட வகைகளால் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகம் மட்டுமின்றி உலக அளவில் ஏழைகள் – நடுத்தர மக்கள் முதற்கொண்டு தொழில்முனைவோர் வரை அனைவரும் மனதாலும் – பொருளாதாரத்தாலும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

  இதுநாள்வரை ஏற்பட்ட துயரங்கள் அனைத்தும் விலகி, நாளை பிறக்கவிருக்கின்ற புத்தாண்டு (01.01.2022) அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியையும் – வளத்தையும் அளிக்கவேண்டும் எனக்கூறி, உலகெங்கிலும் வாழும் சகோதர – சகோதரிகள் அனைவருக்கும் இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

  வாழ்த்துக்களுடன்,

  ரவிபச்சமுத்து

  தலைவர்

  இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)