• அறியாமை எனும் இருளை அகற்றி ஒற்றுமை எனும் பலத்தைக் கூட்டிடநாட்டின் வளர்ச்சிக்கு ஒவ்வொருவரும்துணை நிற்க வேண்டும்டாக்டர் பாரிவேந்தர் M.P. அவர்கள் விடுத்திருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துச்செய்தி

  உலக நிகழ்வுகளை வருங்காலத் தலைமுறைகளுக்கு காலமுறைப்படி நினைவூட்டிடும் வரலாற்றிற்கு அச்சாணியாக ஏசுநாதரின் பிறப்பினை மையமாக வைத்துக் கணக்கிடப்படும் ஆங்கில ஆண்டு 2021 விடைபெற, புத்தாண்டு 2022 பிறக்கின்றது.

  இன்பம் பெருகும் – துன்பம் ஒழியும் என்ற நம்பிக்கையுடன் தமிழக மக்கள் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டை வரவேற்று கொண்டாடி மகிழ்கின்றார்கள். கொரோனா வைரசின் புதிய பரிணாமமான ‘ஒமிக்ரான்’ பரவலைத் தடுக்கும் பொருட்டு மக்கள் அனைவரும் தகுந்த பாதுகாப்புடனும் – சமூக இடைவெளியைப் பின்பற்றியும் நடக்கவேண்டும் என இந்நேரத்தில் கேட்டுக்கொள்கின்றேன்.

  நாளை பிறக்கவுள்ள புத்தாண்டு  மக்களிடையே அறியாமை எனும் இருளை அகற்றி – ஒற்றுமை என்னும் பலத்தைக் கூட்டுவதுடன், நாட்டில் அமைதியையும் – மேம்பாட்டையும் வளர்க்க நாம் ஒவ்வொருவரும் துணைநிற்க வேண்டும் என கேட்டுக்கொள்வதுடன், அனைத்துத் துறைகளிலும் இந்தியா உயர்ந்த நிலையை அடையவேண்டும் எனக்கூறி, உலகெங்கும் வாழும் அனைத்து சகோதர –சகோதரிகளுக்கும் என் உளம் கனிந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். 

  வாழ்த்துக்களுடன்,

  டாக்டர் பாரிவேந்தர் M.P.

  பெரம்பலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்.