-
“அகிலத்தைக் காக்க தன்னையே அர்ப்பணித்தவர் இயேசுநாதர்” ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து அவர்கள் விடுத்திருக்கும் - கிறிஸ்துமஸ் தின வாழ்த்துச் செய்தி
புறக்கணிக்கப்படும் உயிர்களுக்காக மனமிரங்கி – அவற்றை அரவணைத்து எல்லா உயிர்களையும் நேசிப்போம் என்ற அறிவுரையை வழங்கி அதன்படியே வாழ்ந்து காட்டிய இறைத்தூதர் இயேசுபிரானின் பிறந்த நாளை (25.12.2021) கிறிஸ்து பிறப்பு தினமாகக் கொண்டாடி வருகின்றோம்.
தேசம் வன்முறையில் வதைபடாமல் அன்பு – அமைதி - ஆனந்தம் இவை அனைத்து உயிர்களுக்கும் கிடைக்க, இந்த அகிலத்தை அறவழியில் நடத்தும் ஆற்றல் பெற்றதோடு, சாதி – மத - இனவேற்றுமை மறைந்து அன்பு, கருணை, ஈகை அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என போதித்தவர் இயேசுநாதர்.
இந்த உலகத்தைக் காக்க, தன்னையே தந்த தியாகத்தின் திருவுருவமான இயேசுபிரானின் போதனைகளை பின்பற்றி, அனைவரின் வாழ்விலும் அன்பு பெருகி - மகிழ்ச்சி பொங்கிட வேண்டும் எனக்கூறி, உலகெங்கும் வாழும் கிருஸ்துவ சகோதர – சகோதரிகள் அனைவருக்கும் இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் இனிய கிருஸ்துமஸ் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
வாழ்த்துக்களுடன்,
ரவிபச்சமுத்து
தலைவர்
இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)