• ‘அன்பும் அறமும் அநீதியை வீழ்த்தும் ஆற்றல் வாய்ந்த ஆயுதங்கள்’ என்பதை அமைதி வழியில் போதித்தவர் இயேசுபிரான். - டாக்டர் பாரிவேந்தர் M.P. அவர்களின் கிறிஸ்துமஸ் வாழ்த்துச்செய்தி

    அனைவரிடத்திலும் அன்பு பாராட்டி, கருணையின் வடிவாய் வாழ்ந்த இயேசுபிரான் போதித்த அன்பு, எளிமை, கருணை போன்ற உயரிய குணங்களை பின்பற்றி சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும்.

    பாவங்களிலிருந்தும், தீமைகளிலிருந்தும் விலகி, நல்வழியில் பயணம் செய்ய அவர் வகுத்த பாதைதான் கிறிஸ்துவம். நமக்கு தீமை செய்யும் எதிரிகளுக்கும் இரக்கம் காண்பித்து, அவர்களை மன்னிக்கும் மாண்பினை உலகிற்கு எடுத்துரைத்து, அதைத் தன் வாழ்வின் இறுதிவரை கடைபிடித்தார்.

    அன்பும் அறமும் அநீதியை வீழ்த்தும் ஆற்றல் வாய்ந்த ஆயுதங்கள் என்பதை அமைதி வழியில் போதித்தவர் இயேசு பிரான். இயேசு பிரான் போதித்த அன்பு வழியை மக்கள் அனைவரும் பின்பற்றி,  வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையுடன் வாழ்ந்திட உறுதியேற்போம் எனக்கூறி, அவர் பாலகனாக அவதரித்த இந்த நன்னாளில் (25.12.2021), உலகெங்கும் வாழும் கிறித்துவ சகோதர – சகோதரிகளுக்கு என் உளம் கனிந்த கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

    வாழ்த்துக்களுடன்,

    டாக்டர் பாரிவேந்தர்  M.P,

    பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி