• இந்தியாவின் முப்படை தளபதிகளின்... தலைமைத் தளபதி திரு பிபின் இராவத் மரணமடைந்தார்… இந்திய ஜனநாயகக் கட்சி ஆழ்ந்த இரங்கலைத் தெரியப்படுத்துகிறது…

  உத்தரகாண்ட் மாநிலத்தில் பிறந்த திரு பிபின் இராவத்.ராஜ்புத் வம்சாவளியை சேர்ந்தவர்.

  பல தலைமுறைகளாக… தொடர்ந்து இராணுவத்தில் பணியாற்றிய பெருமைக்குரிய குடும்பத்தைச் சேர்ந்தவர்…. திரு பிபின் இராவத்.

   31-12-2016 இல் இந்திய இராணுவத்தின் தரைப்படை யின் 27 ஆவது தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டார்.

  2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நாள் இந்திய இராணுவத்தில் முதன்முதலில் முப்படை தளபதிகளின் குழுவுக்கு முதல் தலைமை தலைவர்... இந்திய குடியரசு தலைவர் அவர்களால் நியமிக்கப்பட்டார்.தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் பாதுகாப்பு பிரிவு உயர் அதிகாரிகளுக்கான பயிற்சி கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்தார்.

  இறுதியாக. திரு பிபின் இராவத் , அவரது மனைவி உட்பட 13 பேர் பயணம் செய்த போது ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தார்கள் என்பது தமிழ் மக்களுக்கு மீளாத துயரம்.அவரை இழந்து வாடும், இந்திய ராணுவத்திற்கும் இந்திய திரு நாட்டிற்கும்.. அன்னாரது குடும்பத்தினருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரியப்படுத்தி கொள்கிறேன்.அன்னாரது ஆன்மா. இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற… பிரார்த்தனை செய்கின்றேன்.

  இங்ஙனம்

  ரவி பச்சமுத்து

  தலைவர்

  இந்திய ஜனநாயகக் கட்சி.