• முன்னாள் தமிழக ஆளுநரும் – முன்னாள் ஆந்திர முதல்வருமான‘ திரு. ரோசைய்யா அவர்களின் மறைவிற்கு ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து அவர்கள் விடுத்திருக்கும் இரங்கல் செய்தி

  தமிழக முன்னாள் ஆளுநரும் – ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான திரு.ரோசைய்யா அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில்,  சிகிச்சை பலனின்றி இன்று காலமானார் என்கிற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றோம்.

  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான இவருடைய மறைவு அனைவருக்கும் பெரிய இழப்பாகும்.  ஆந்திர  அரசியலில் மிகவும் பலம் வாய்ந்தவராக இருந்தவர்.  1979 முதல் 2009 வரை  அமைச்சராக இருந்து 16 முறை ஆந்திர மாநிலத்தின் பட்ஜெட்டை தாக்கல் செய்தவர்.

  திரு.ரோசைய்யா அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டு, அவரின்  ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன்.

  வருத்தங்களுடன்,

  ரவிபச்சமுத்து

  தலைவர்

  இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)