• ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் மற்றும் முன்னாள் தமிழக ஆளுநர் திரு ரோசய்யா மறைவிற்கு பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பாரிவேந்தர் M.P இரங்கல்

  தமிழக முன்னாள் ஆளுநர் திரு.ரோசைய்யா, ஆந்திர மாநில மக்களுக்கு அரும்பணி ஆற்றிய தலைவர்களில் ஒருவர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர், ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தில் 15 முறை நிதி அமைச்சராக இருந்த பெருமைக்குரியவர். ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராகவும் இருந்தவர்.

  2011 முதல் 2016–ஆம் ஆண்டு வரை தமிழகத்தின் ஆளுநராக பதவி வகித்தவர்.

  அன்னாரது மறைவு ஆந்திர மாநிலத்திற்கு மட்டுமல்லாமல் இந்திய தேசத்திற்கே பெரும் இழப்பாகும்.

  அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு,  அவரின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

  வருத்தங்களுடன்,

  டாக்டர் பாரிவேந்தர் M.P

  பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி.