• தமிழக அரசு வேலைவாய்ப்பில் 3 சதவீதம் இட ஒதுக்கீட்டில் ‘சிலம்பம்‘ சேர்க்கப்பட்டது - தமிழக அரசின் அறிவிப்பை IJK வரவேற்கிறது

  தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுக்களில் முக்கியமானது சிலம்பம்.

  உடலுக்கு வலிமையையும், உற்சாகத்தையும் தரும் சிலம்பக் கலையில் சிறந்து விளங்கும் சிலம்பாட்ட வீரர்களுக்கு  அரசு வேலைவாய்ப்பு அளிப்பதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

  3 சதவீத விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டில், சிலம்பாட்ட வீரர்கள் இடம்பெற்றதன் மூலம் அவர்களுக்கான அரசு வேலை வாய்ப்புக் கனவு நனவாகியுள்ளதை இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் வரவேற்கின்றேன்.

  அன்புடன்

  ரவிபச்சமுத்து

  தலைவர்

  இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)