-
சென்னையில் முன்னாள் தமிழக முதல்வர் கர்மவீரர் காமராஜர் வாழ்ந்த இல்லம் புனரமைக்கப்படும் - தமிழக அரசின் அறிவிப்பை IJK வரவேற்கிறது
காமராஜர் நினைவு இல்லத்தில் பொக்கிஷமாக இருக்கக்கூடிய, அவரது அரசியல் வாழ்க்கையில் மேற்கொண்ட பணிகள் குறித்த புகைப்படங்கள்,
காமராஜர் தமிழக முதல்வராக இருந்தபோது செய்த பணிகள் குறித்த புகைப்படங்கள், முக்கிய தலைவர்களைச் சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஆகியவற்றை புதுப்பித்து, பராமரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
கட்டடம் கட்டப்பட்டு நீண்டகாலம் ஆகிவிட்டதால், அதன் உள்பகுதி மேற்கூரைகள் எல்லாம் சிறிது சிதிலமடைந்திருக்கின்றன.
அதை சரிசெய்து, அதற்கு வர்ணம் பூசும் பணிகள் மேற்கொள்ளப்படும். மழைக்காலங்களில், கட்டடம் பழுதடையாத வகையில், பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்கின்றேன்.
அன்புடன்,
ரவிபச்சமுத்து
தலைவர்
இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)