• தனியார் பள்ளிகளுக்கு வழங்கவேண்டிய கட்டாயக்கல்வி நிதியை உடனே விடுவிக்க வேண்டும் - டாக்டர் பாரிவேந்தர் M.P கோரிக்கை

    கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி, தமிழகத்தில் உள்ள நர்சரி - பிரைமரி மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கு 2020 – 21–ஆம் ஆண்டுக்கான 419.53  கோடி ரூபாயை பள்ளிகளுக்கு விடுவிக்க இந்த ஆண்டு அக்டோபர் 13-ல் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

    ஒரு மாதத்தைக் கடந்த பிறகும், கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தில் மாணவர் சேர்க்கைக்கான கல்விக்கட்டணம் பள்ளிகளுக்கு வழங்கப்படவில்லை.

    கொரோனா கட்டுப்பாடுகளுக்குப் பின் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், பள்ளிகள் பராமரிப்பு - ஆசிரியர்கள் சம்பளம் - வாகன பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு நிதி பற்றாக்குறையாக உள்ளது.

    எனவே பள்ளிகளுக்கு வழங்கவேண்டிய கட்டாயக்கல்வி சட்ட நிதியை விரைந்து வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

    அன்புடன்,

    டாக்டர் பாரிவேந்தர் M.P,

    பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி