• பாதுகாப்பான குடிநீரை பொதுமக்களுக்கு வழங்குவதை அரசு உறுதி செய்யவேண்டும் - டாக்டர் பாரிவேந்தர் M.P வேண்டுகோள்

  மழைநீர் வடிந்த இடங்களில் பிளீச்சிங் பவுடர்கள் மற்றும் கிருமி நாசினிகள் தெளிக்கவேண்டும். மருத்துவ முகாம்கள் நடத்தப்பட வேண்டும்.

  பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும் குடிநீரில் சரியான அளவு குளோரின் சேர்க்கப்படுவதை உறுதி செய்யவேண்டும்.

  குடிதண்ணீரில் ஏற்படும் மாசால் வயிற்றுப்போக்கு, கணைய அழற்சி, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் தீவிரமாக பரவுகிறது. எனவே, அதை கருத்தில்கொண்டு குடிநீரின் பாதுகாப்பை முறையாக கண்காணிக்க வேண்டும்.

  கொசுக்கள் வாயிலாக பரவும் சிக்குன்குனியா, டெங்கு, மலேரியா போன்ற நோய்களும், மழைக்காலங்களில் அதிகம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. கொரோனா பரவலுக்கு இடையில் பருவகால நோய்களைத் தடுக்கும் பணிகளை அரசு துரிதமாக மேற்கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

  அன்புடன்,

  டாக்டர் பாரிவேந்தர் M.P

  பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி