• மழைவெள்ள பாதிப்புகளில் இருந்து மக்களைப் பாதுகாக்க தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் - டாக்டர் பாரிவேந்தர் M.P, வலியுறுத்தல்

  தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடையத் தொடங்கி உள்ளது. வங்கக் கடலில் இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுமாம். இதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு  உள்ளது என வானிலை மையம் அறிவித்துள்ளது.

  கன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

  சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளைத் தொடர்ந்து மூன்றாவது நாளாக நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுவரும் தமிழக முதல்வரை பாராட்டுகின்றேன்.

  மேலும், வரும் நாட்களில் மழை இன்னும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுவதால், போர்க்கால அடிப்படையில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

  அன்புடன்,

  டாக்டர் பாரிவேந்தர் M.P

  பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி.