• தமிழகம் முழுவதும் உள்ள IJK தொண்டர்களுக்கு மற்றும் பொறுப்பாளர்களுக்கு - டாக்டர் பாரிவேந்தர் M.P, வேண்டுகோள் – “மழைவெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுங்கள்”

  பருவமழை கடந்த மாதம் 26-ஆம் தேதி தொடங்கியது. பரவலாக மழை பெய்து வந்தது. இம்மாதம் 6-ஆம் தேதி இரவு முதல் - நேற்று முன்தினம் காலை வரையிலும் ஒன்பது மணி நேரத்துக்கும் மேலாக சென்னை நகரில் மழை கொட்டியதால், நகரம் முழுவதும் வெள்ளக்காடானது-

  சென்னையில் அதிகபட்சமாக, 23 செ.மீ வரை மழை பெய்தது. இதுபோல தமிழகம் முழுவதுமாக பெரும்பாலான இடங்கள் மழை நீரால் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல். மிக கனமழை பெய்துள்ளது.

  மேலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தருமபுரி, கோவை, கருர், நாமக்கல், திருச்சி, சிவகங்கை, மதுரை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை விட்டுவிட்டு பெய்துள்ளது. பிற மாவட்டங்களில் மிதமான மழை பெய்துள்ளது.

  புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் வரும் நான்கு நாட்களில் மிகக் கனமழை பெய்யக்கூடும் என்று, சென்னை வானிலை மையம் அறிவித்திருக்கிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

  இந்திய ஜனநாயக கட்சி பொறுப்பாளர்கள் ஆங்காங்கே இருக்கும் நமது தொண்டர்களை ஒருங்கிணைத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிடுமாறு கேட்டுககொள்கின்றேன்.

  அன்புடன்,

  டாக்டர் பாரிவேந்தர் M.P

  பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி