• தீமையை நன்மை வெற்றி பெற்றதன் அடையாளம் ‘தீபாவளி’ திருநாள் - IJK தலைவர் ரவிபச்சமுத்து அவர்கள் விடுத்திருக்கும் தீபாவளி வாழ்த்துச் செய்தி

  “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்ற மனிதநேய ஒருமைப்பாட்டை  வாழ்க்கையில் கடைப்பிடித்து நம்மை வாழவைக்க, தனிமனித சமூகத்தின் நல்வாழ்வைக் கருதி, நம் முன்னோர்களால் மிகுந்த சிந்தனையுடன் ஏற்படுத்தப்பட்டவைதான் பண்டிகைகள்.

  அந்த வரிசையில் தீமையை, நன்மை வெற்றி பெற்றதன் அடையாளம் ‘தீபாவளி’ திருநாள் ஆகும். தீபாவளிப் பண்டிகை இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில், பல்வேறு பெயர்களில் அனைவராலும் கொண்டாடப்படுகின்றது. இருள் அகன்று - ஒளி பிறக்கும் நாளாய்,  தீமைகள் அகன்று - நன்மைகள் சிறக்கும் நன்நாளாய் கொண்டாடப்படும் தீபத் திருநாளில், நம் நாட்டில் சூழ்ந்துள்ள தீமைகளை நாம் அனைவரும் ஒன்றுபட்டு வெல்வோம் என்று இந்த நல்ல நாளில் உறுதி ஏற்போம் எனக் கூறி, நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளித் திருநாள் (04.11.2021) நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன்

  வாழ்த்துக்களுடன்,

  ரவிபச்சமுத்து

  தலைவர்

  இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)