• சாதிமதங்களைக் கடந்து அனைவரது வாழ்விலும் ஒளியேற்றும் நாள் ‘தீபஒளித் திருநாள்’ - டாக்டர் பாரிவேந்தர் M.P தீபாவளி வாழ்த்து

    தீப ஒளித் திருநாள், உலகத்தில் உள்ள தீயவைகளைப் போக்கி, நற்செயல்களை நிலை நாட்டுவதனை அடிப்படையாகக் கொண்டுள்ளதால், உலகெங்கிலும் வாழும் மக்கள் பலராலும் இத்திருநாள் கொண்டாடப்பட்டு வருகின்றது.

    சாதி மதங்களை கடந்து அனைத்து தரப்பு மக்களின் வாழ்விலும் ஒளியேற்றும் நாள்தான் “தீபஒளித் திருநாள்”. இத் திருநாளில் ஏற்றப்படும் தீபத்தின் ஒளியானது எவ்வாறு இருளை அகற்றுகிறதோ, அதே போன்று மக்களின் மனங்களிலும், வாழ்விலும் ஒளிவீசி மகிழ்வோடு வாழவைக்கும்.

    குறைந்து கொண்டிருக்கும் கொரோனா தொற்று முழுவதும் அகன்றிட ஒளி ஏற்றுவோம். கொண்டாட்டங்களால் நோய்த்தொற்று பரவாமல் பாதுகாத்துக் கொள்வது நமது ஒவ்வொருவருடைய கடமையாகும். தகுந்த கட்டுப்பாடுகளோடும், பாதுகாப்போடும் தீபஒளித் திருநாளை கொண்டாடவேண்டும் எனக்கூறி, உலகெங்கும் வாழும் மக்கள் அனைவருக்கும் எனது இனிய தீபஒளித்திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்

    வாழ்த்துக்களுடன்,

    டாக்டர் பாரிவேந்தர் MP

    பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி.