• கூட்டுறவு வங்கிகளில் பெற்ற ஐந்து பவுன் நகைக்கடன்கள் தள்ளுபடி இந்திய ஜனநாயகக் கட்சி வரவேற்கிறது

  ஒரு குடும்பத்திற்கு ஐந்து பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன்கள், சில தகுதிகளின் கீழ் உண்மையான ஏழை – எளிய மக்கள் பயனடையும் வகையில் தள்ளுபடி செய்யப்படும்.

  தகுதியுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஐந்து பவுனுக்கு உட்பட்டு நகைகடன்களை தள்ளுபடி செய்வதற்காக, அரசுக்கு ஏற்படும் பூர்வாங்க மதிப்பீடுகள்  மற்றும் ஆய்வுகளின் அடிப்படையில் செலவு 6 ஆயிரம் கோடி ரூபாயாகும்.

  தமிழக அரசு கட்சி பாகுபாடு காட்டாமல் உண்மையான ஏழை – எளிய மக்கள் பயன் பெறுமாறு பார்த்துக்கொள்ளவேண்டும் என இந்திய ஜனநாயக் கட்சி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றது.

  அன்புடன்,

  ரவிபச்சமுத்து

  தலைவர்

  இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)