• தமிழ்நாடு நாள் ஜூலை 18-ஆம் தேதியா? நவம்பர் 1-ஆம் தேதியா? இரண்டு தேதிகளையும் கொண்டாடலாமே! - டாக்டர் பாரிவேந்தர் M.P. விண்ணப்பம்

    1956-ஆம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி இந்தியா முழுவதும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதனடிப்படையில், அப்போதைய மெட்ராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திரா,  கர்நாடகம் மற்றும் கேரளத்தின் சில பகுதிகள் பிரிந்து சென்றன.

    இந்நிலையில், 2019 –ஆம் ஆண்டு தமிழகத்தை ஆண்ட அ.தி.மு.க அரசு, நவம்பர் 1-ஆம் தேதியை தமிழ்நாடு மாநிலம் தேதியாக அறிவித்து இருந்தது. பேரறிஞர் அண்ணா தமிழக முதலமைச்சராக இருந்தபோது, மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை மாற்றி, 1968-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18-ஆம் தேதி ‘தமிழ்நாடு’ என்று சட்டசபையில் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றினார்.

    இப்போது, தமிழகத்தை ஆளும் தி.மு.க அரசு, பல்வேறு அமைப்புகளின் கோரிக்கைகளை கவனமாக பரிசீலித்து, தாய் தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18-ஆம் தேதியையே தமிழ்நாடு நாளாக இனி கொண்டாடப்படும் என்று அறிவித்துள்ளது. நவம்பர் 1-ஆம் தேதியை எல்லைப் போராட்ட தியாகிகளை கௌரவிக்கும் நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தியாகிகளை கௌரவிக்கவும் முடிவு எடுத்துள்ளது திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அரசு.

    மேற்கண்ட முடிவுகளை பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினராக வரவேற்கின்றேன்.

    அன்புடன்,

    டாக்டர் பாரிவேந்தர் M.P

    பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி