• பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வரலாறு மத நல்லிணக்கத்தை மக்களுக்கு கற்றுத்தரும் காவியம் - IJK தலைவர் ரவிபச்சமுத்து அவர்களின் தேவர் ஜெயந்தி வாழ்த்து

  ஆன்மிகவாதியாகவும், சாதி பாகுபாட்டை எதிர்ப்பவராகவும், சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கியவர்.  பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள்.

  சாதி மதத்திற்கெல்லாம் அப்பாற்பட்டு, அனைத்து சமூகத்தினராலும் போற்றப்பட்ட உத்தமர் தேவர். இந்துவின் வயிற்றில் பிறந்து, இஸ்லாமிய மடியில் தவழ்ந்து, கிறித்துவரின் அரவணைப்பில் கல்வி பயின்று பாரத நாட்டின் விடுதலைப்போரில்  தளபதியாய் விளங்கியவர்.  பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவராக இருந்தவர். மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

  பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வரலாறு  மத நல்லிணக்கத்தை மக்களுக்கு கற்றுத்தரும் காவியமாகும். அவரின் வாழ்வும் வாக்கும் என்றும் தமிழ் மக்களை - தமிழர்களை வாழவைக்கும் என்று, தேவரின் பிறந்த நாளில் (30.10.2021) இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் தேவர் ஜெயந்தி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

  வாழ்த்துக்களுடன்

  ரவிபச்சமுத்து

  தலைவர்

  இந்திய ஜனநாயகக் கட்சி  (IJK)