• “மனதில் உறுதியும் – செயலில் தீரமும் மிக்கவர் நபிகள் நாயகம்” ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து அவர்களின் - மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தி

  இஸ்லாமிய மார்க்கத்தை வையகத்திற்கு, முகம்மது நபிகள் (ஸல்) அவர்கள் வழியாக அருளிச்செய்த அல்லாஹ், திருக்குரான் மூலம் உலகத்திற்கு பெரும் ஒளிப்பிழம்பைக் கொடுத்தார்.

  மனதில் உறுதியும் - செயலில் தீரமுமிக்கவர் முகம்மது நபிகள். தன் வாழ்நாளிலேயே தன்னுடைய இறுதி தூது வெற்றி பெற்று, உலகம் முழுக்க இஸ்லாம் மார்க்கம் பரவுவதை கண்ணுற்று, தன்னுடைய 63-வது வயதில் அல்லாஹூ தாலாவிடம் சென்ற தூயவர் – வெற்றியாளர் முகம்மது நபிகள்.

  வாழ்க்கையின் அறநெறிகளை மனித சமுதாயத்திற்கு உருவாக்கிக் கொடுத்த, நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை (19.10.2021) கொண்டாடும் இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கி, அமைதி நிறைந்து, சிறப்பான வாழ்வு வாழ்ந்திட, இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் எனது இதயப்பூர்வமான மீலாதுன் நபி திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

  வாழ்த்துக்களுடன்,

  ரவிபச்சமுத்து

  தலைவர்

  இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)