• ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து அவர்களின் - ஆயுதபூஜை வாழ்த்துச் செய்தி

  ஒரு மனிதனின் உடல் வளர்ச்சிக்கு வலிமையும், வளமான வாழ்க்கைக்கு செல்வமும் - கல்வியும் மிகவும் அவசியமாகும். உடலுக்கு வலிமையைத் தரவேண்டி சக்தி வடிவமான துர்காதேவியை வழிபடுகின்றோம். செல்வத்தைத் தாருங்கள் தாயே! என்று ஸ்ரீ மகாலட்சுமியைப் பிரார்த்தனை செய்கின்றோம். அறிவையும் – ஞானத்தையும் - கல்வியையும் தருமாறு சரஸ்வதி மாதாவை பூஜிக்கின்றோம். இந்த.. கல்வி – செல்வம் – வீரம் ஆகிய மூன்றையும் பெறுவதற்காக கொண்டாடப்படுவதுதான் நவராத்திரி பண்டிகை ஆகும்.

  உலகத்தில் உள்ள எல்லா ஜீவன்களிலும் மற்றும் ஜடப்பொருட்களிலும் கூட இருப்பவள் சரஸ்வதி. ஆகவேதான் ஆயுத பூஜையுடன் சரஸ்வதி பூஜையையும் சேர்த்து கொண்டாடுகின்றோம். ஆயுத பூஜைக்கு மறுநாள் விஜயதசமியன்று புதிதாகத் தொழில் தொடங்குபவர்கள் அன்றைய தினம் துவங்கினால், அந்த ஆண்டு முழுவதும் அவர்களின் தொழில் சீரும் - சிறப்புடனும் நடைபெறும், செல்வ வளமும் பெருகும் என்பது ஐதீகம்.

  இந்த ஆயுதபூஜை – சரஸ்வதி பூஜை – விஜயதசமி ஆகியவற்றைக் கொண்டாடும் இந் நன்நாளில் தமிழக மக்கள் எல்லா வளமும் பெற்று வாழ இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் வாழ்த்துகின்றேன்

  வாழ்த்துக்களுடன்,

  ரவிபச்சமுத்து

  தலைவர்

  இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)