• ‘மனிதநேயத்தின் அடையாளமாகத் திகழ்ந்தவர் மகாத்மா’ ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து அவர்களின் - காந்தி ஜெயந்தி வாழ்த்துச் செய்தி –

  ஆங்கில ஆட்சிக்கு எதிராகவும், இந்திய விடுதலைக்காகவும் அந்நியப் பொருட்கள் புறக்கணிப்பு, உப்பு சத்தியாகிரகம், வரி கொடா இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் என பலப் போராட்டங்களை அறவழியில் முன்னெடுத்து நடத்தி, துப்பாக்கி ஏந்திய வெள்ளையர்களையே திகைக்கச் செய்தவர்.

  மனிதநேயத்தின் அடையாளமாக  திகழ்ந்தவர் மகாத்மா காந்தியடிகள். பாரத நாட்டிற்காக தன்னுடைய உயிரையும் காணிக்கையாக்கிய மகாத்மாவின் வாழ்க்கை வரலாறு மற்றும் போராட்டங்கள் உலக சரித்திரத்தில் எழுதப்பட்ட அழியா சுவடுகள் ஆகும். மகாத்மாவின் 152-வது பிறந்த நாளான இன்று (02.10.2021) அவர் காட்டிய சத்தியத்தின் வழி பின்பற்றி நடப்போம் என உறுதியேற்போம்.

  வாழ்த்துக்களுடன்,

  ரவிபச்சமுத்து

  தலைவர்

  இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)