• எதிர்கொள்ளவிருக்கும் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலில் இந்திய ஜனநாயகக் கட்சி திமுக-விற்கு ஆதரவு

  தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தென்காசி, திருநெல்வேலி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.

  அதன்படி 2021 அக்டோபர் 6,  மற்றும்  9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

  எதிர்கொள்ளவிருக்கும் 9 மாவட்டங்களுக்கான ஊரக  உள்ளாட்சித் தேர்தலில் இந்திய ஜனநாயகக் கட்சி திமுக-வுக்கு ஆதரவாக இருக்கும் என்பதனை தெரிவித்துக்கொள்கின்றோம்.

  இதேபோல் நம் கட்சியின் மாநில,  மாவட்ட பொறுப்பாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் திமுக-வுடன் இணைந்து தேர்தல் களப்பணியாற்றி திமுக வெற்றிபெற உறுதுணையாக இருக்கவேண்டுமென கேட்டுக்கொள்கின்றோம்.

  அன்புடன்,

  ரவிபச்சமுத்து

  தலைவர்

  இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)