• ஐ.ஜே.கே இணை பொது செயலாளர் - டாக்டர்.லீமாரோஸ் மார்டின் வெளியிடும் நீட் தேர்வு செய்தி

  மாணவ மாணவிகள் நீட் தேர்வின் முடிவுகளை நினைத்து விபரீதமான முடிவுகளை எடுக்க வேண்டாம்.தேர்வுகளை தைரியத்துடனும், துணிச்சலுடனும் எதிர் கொண்டு வெற்றி பெற வேண்டும் என்று ஒரு தாயாகவும், சகோதரியாகவும் உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  நீங்கள் பெறும் மதிப்பெண்கள் உங்கள் எதிர்காலத்தை தீர்மானித்து விடாது.அது வெறும் மதிப்பெண்தான், நீங்கள் மன உறுதியுடன் இருக்க வேண்டும்.உங்கள் பெற்றோர்கள் உங்களை நினைத்து ஆயிரம் ஆயிரம் கனவு கண்டு இருப்பார்கள். அவர்களது கனவுகளை சிதைத்து வருத்தம் அடைய செய்ய வேண்டாம்.

  உங்களின் முன்னேற்றத்திற்காக நமது தமிழக முதல்வர் அவர்கள் பல முயற்சிகளையும் முன்னேற்பாடுகளையும் எடுத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

  ஆகவே மாணவ மாணவிகள், மன தைரியத்துடன் இருந்து வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

  இப்படிக்கு

  Dr.லீமா ரோஸ் மார்டின்

  இணை பொது செயலாளர்

  இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)