• விநாயகர் சதுர்த்தி விழா நம் பண்பாட்டின் அடையாளமாகும் - டாக்டர் பாரிவேந்தர் M.P விநாயகர் சதுர்த்தி வாழ்த்து

    வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட இந்தியா போன்ற வளரும் நாட்டில் பல சாதிகளும் – மதங்களும் பல்கிப் பெருகினாலும், நாம் மனிதர்கள்தான் என்ற உயர்ந்த சிந்தனையில் அனைவரும் ஒன்றுபடவேண்டும்.

    இந்தியாவின் ஒருமைப்பாட்டையும், ஆன்மீக வளர்ச்சியையும்,  வார்த்தெடுக்கும் தளமாகவும், அனைத்து சாதி – மதங்களையும் ஒருங்கிணைக்கும் சங்கமமாகவும் விளங்குவதே இதுபோன்ற கடவுளின் அவதார திருவிழாக்கள்தான்.  அந்த வகையில் விநாயகர் சதுர்த்தி திருவிழா என்பது நம் பண்பாட்டின் அடையாளமாகவும், நம் நாட்டின் முதன்மையான பண்டிகையாகவும் விளங்குகிறது.

    கொரோனா பேரிடரால் ஏற்பட்டுள்ள துன்பங்கள் அகன்று, அனைவரும் உடல் ஆரோக்கியமும், பொருளாதார வளமும், மகிழ்ச்சியான வாழ்வும் பெற விநாயகர் துணை நிற்கட்டும்.

    இந்த நன்னாளில் வினைதீர்க்கும் தெய்வமும், கடவுளுக்கெல்லாம் முழுமுதற் கடவுளுமான விநாயகரின் பரிபூரண அருள் அனைவருக்கும் கிடைத்து, எல்லோருடைய வாழ்க்கையிலும்  நலமும் - வளமும் பெற்று வாழ விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

    வாழ்த்துக்களுடன்,

    டாக்டர் பாரிவேந்தர் M.P

    பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி.