• புகழ்பெற்ற பாடலாசிரியரும் - முன்னாள் அரசவைக்கவிஞருமான கவிஞர் திரு.புலமைபித்தன் அவர்களின் மறைவிற்கு டாக்டர் பாரிவேந்தர் M.P இரங்கல்

    பிரபல கவிஞரும் – முன்னாள் அவைத்தலைவருமான   புலமைப்பித்தன் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.

    1935ஆம் ஆண்டு கோவை மாவட்டத்தில் பிறந்த புலமைபித்தன் அவர்கள் தமிழ் சினிமாவில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடல்களை எழுதியுள்ளார்.

    தமிழ் ஆசிரியராக சிறப்பாக பணியாற்றியவர். அ.தி.மு.க வின் முன்னாள் அவைத் தலைவர் – மறைந்த முதல்வர்கள் திரு. எம்.ஜி.ஆர் மற்றும் செல்வி ஜெயலலிதா அவர்களுடன் நெருங்கிப் பழகியவர். திரு.எம்.ஜி.ஆர் அவர்களால் "அரசவைக் கவிஞராக" நியமிக்கப்பட்டவர். இயக்க வளர்ச்சிக்காகப் பாடுபட்டவர்.  தமிழ் கவிஞர் மற்றும் பாடலாசிரியர். தமிழ்த்திரையுலகில் சிறந்த பாடலாசிரியருக்கான விருதுகள் பல பெற்றவர்.

    இத்தகு சிறப்புகள் வாய்ந்த அவரது மறைவு நமக்கெல்லாம் பேரிழப்பாகும். அவரின் மறைவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கும், அ.தி.மு.க இயக்கத்தினருக்கும் என் சார்பிலும், இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டு, அவரின் ஆன்மா இறைவனடி சேர பிரார்த்திக்கின்றேன்.

    வருத்தங்களுடன்,

    டாக்டர் பாரிவேந்தர் M.P

    பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி