• “சிறந்த ஆசிரியர்கள் நாட்டின் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் ஆவர்” - டாக்டர் பாரிவேந்தர் M.P, ஆசிரியர் தின வாழ்த்து

    ஆசிரியர்  தினம் என்பது கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடப்படுகிறது. நமக்கு ஒழுக்கம், தன்னம்பிக்கை, பொது அறிவு என பல்வேறு விஷயங்களைக் கற்பித்து, உண்மையான வழிகாட்டியாக ஆசிரியர்கள் திகழ்கின்றனர்.  அப்படி செயல்பட்டவர் தான்  சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள்.  நம் நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவராக இருந்த ராதாகிருஷ்ணன், மாபெரும் தத்துவ மேதையாக விளங்கினார். இவரை கவுரவப்படுத்தும் வகையில், ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ஆம் தேதி ஆசிரியர் தினமாக 1962-ஆம் ஆண்டு முதல் கொண்டாடி வருகிறோம்.

    சிறந்த ஆசிரியர்கள் நாட்டின் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் ஆவர். நாட்டின் வருங்கால தூண்களான மாணவ செல்வங்களுக்கு, அழிவில்லா கல்விச் செல்வத்தை அளிப்பதோடு, ஒழுக்கம் – பண்பு – தன்னம்பிக்கை - விடாமுயற்சி ஆகிய நெறிகளையும் போதித்து, வளமிக்க அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கும் அரும்பணியை ஆற்றிவரும் ஆசிரியர்களுக்கு இந்நன்னாளில் ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்

    வாழ்த்துக்களுடன்,

    டாக்டர் பாரிவேந்தர் M.P

    பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி