-
IJK தலைவர் ரவிபச்சமுத்து அவர்களின் - ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தி
ஒருவர் கற்கும் கல்வியானது அவர்களின் ஏழு பிறப்பிற்கும் உதவும் என்பது தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருவாய் மொழியாகும். ஏழு பிறப்புக்கும் உதவும் கல்வியை கற்றுத்தரும் ஆசிரியர் பெருமக்கள் எவ்வளவு சிறப்பானவர்கள் என்பதை நாம் தெளிவாக உணரவேண்டும். நல்ல ஆசிரியர்களால், ஒழுக்கமும், திறமையும், அறிவாற்றலும் பெற்ற சிறந்த மனிதர்களை உருவாக்கித்தர முடியும். இத்தகு தகுதிகளையுடைய சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளையே ஆசிரியர் தினமாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ஆம் நாள் கொண்டாடி வருகின்றோம்.
அறிவுச்சுடர் கொண்டு அறியாமை எனும் இருளை விலக்கி, அறிவு ஒளியை உலகெங்கும் பரவச் செய்ய ஆசிரியர்கள் பாடுபட வேண்டும்.
இளைய தலைமுறையான மாணவர்களின் சிந்தனை, செயலாற்றலை வளப்படுத்தி, மேம்படுத்தி புதிய உலகத்தை உருவாக்கிட வழி வகை செய்யும் ஆசிரியர்களுக்கு இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
வாழ்த்துக்களுடன்,
ரவிபச்சமுத்து
தலைவர்
இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)