• முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமாகிய திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் மனைவியாரின் மறைவிற்கு டாக்டர் பாரிவேந்தர் M.P இரங்கல்

  தமிழக முன்னாள் முதல்வரும் – அதிமுக  ஒருங்கிணைப்பாளருமாகிய

  திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் மனைவி திருமதி விஜயலட்சுமி அவர்கள் இன்று மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் துயருற்றேன்.

   திரு. ஓ,பன்னீர் செல்வம் அவர்களின் அரசியல் வாழ்வில் பல்வேறு காலகட்டங்களில்  உறுதுணையாக இருந்து வந்தவர் அவரது மனைவியார். மூன்று முறை முதல்வராகவும், ஒருமுறை துணை முதல்வராகவும் பதவி வகித்தபோது, அவரது பல செயல்களிலும் – போராட்டங்களிலும் துணை நின்றவர் அவரது மனைவி திருமதி. விஜயலட்சுமி அவர்கள்.

   உற்ற துணையை இழந்து வாடும் திரு.ஓ.பி.எஸ் அவர்களுக்கும், அவரின் குடும்பத்தினருக்கும் என் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டு, திருமதி விஜயலட்சுமி அவர்களின்  ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

  வருத்தங்களுடன்,

  டாக்டர் பாரிவேந்தர் M.P,

  பெரம்பலூர்  நாடாளுமன்றத் தொகுதி