• முன்னாள் முதல்வர் திரு..ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் மனைவி திருமதி விஜயலட்சுமி அவர்களின் மறைவிற்கு ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து அவர்கள் விடுத்திருக்கும் இரங்கல் செய்தி

  தமிழக முன்னாள் முதல்வரும் – அதிமுக  ஒருங்கிணைப்பாளருமாகிய

  திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் மனைவி திருமதி விஜயலட்சுமி அவர்கள் கடந்த வாரம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு, சிகிச்சை முடிந்து வீடு திரும்ப இருந்த நிலையில், இன்று மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.

  திரு. ஓ,பன்னீர் செல்வம் அவர்களின் பொது வாழ்விற்கு மிகவும் உறுதுணையாக இருந்து, அவரின் அரசியல் வாழ்வில் புகழ் சேர்த்தவர் திருமதி விஜயலட்சுமி. தனது கணவர் மற்றும் மகன் இருவரின் அரசியல் பயணத்திற்கு பக்கபலமாக இருந்தவர்.

  மனைவியை இழந்து வாடும் அண்ணன் திரு.ஓ.பி.எஸ் அவர்களுக்கும், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ரவீந்திரநாத்  அவர்களுக்கும், மற்றும் குடும்பத்தினருக்கும் இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டு, திருமதி விஜயலட்சுமி அவர்களின்  ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன்.

  வருத்தங்களுடன்,

  ரவிபச்சமுத்து

  தலைவர்

  இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)