• இன்று (24.08.2021) காட்டாங்குளத்தூர் SRM பல்கலைக்கழக வளாகத்தில் மாண்பமை டாக்டர் பாரிவேந்தர் M.P, அவர்களின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

  சென்னை அருகே காட்டாங்குளத்தூர் SRM பல்கலைக்கழக வளாகம் T.P.கணேசன் அரங்கில் இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனரும் – பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான  நமது அய்யா மாண்பமை

  டாக்டர் பாரிவேந்தர் M.P, அவர்களின் பிறந்தநாள் நிகழ்ச்சி இன்று (24.08.2021) செவ்வாய்க்கிழமை காலை 12.00 மணியளவில்  நடைபெற்றது.

  இவ்விழாவின் நாயகரான ஐஜேகே நிறுவனரும், பெரம்பலூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான அய்யா டாக்டர் பாரிவேந்தர் M.P, அவர்கள், வருகை தந்து சிறப்புரையாற்றினார். 

  இப்பிறந்த நாள் விழாவில் கட்சியின் தலைவர் உயர்திரு. ரவிபச்சமுத்து அவர்கள் தலைமை தாங்கினார். கட்சியின் பொருளாளர் திரு.ஜி.ராஜன், பொதுச்செயலாளர் திரு.பி.ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மற்றும் கட்சியின் மாநில நிர்வாகிகளும், மாவட்ட – ஒன்றிய – நகர பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

  இங்ஙனம்,

  கட்சி தலைமையகம்,

  இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)