• பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பாரிவேந்தர் M.P, அவர்களின் பிறந்த நாள் விழா அழைப்பு

  அன்புடையீர், வணக்கம்

  இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனரும் – பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான நமது அய்யா மாண்புமிகு டாக்டர் பாரிவேந்தர் M.P, அவர்களின் பிறந்த நாள் விழா, கட்சியின் சார்பில் வருடந்தோறும் இளைஞர்கள் எழுச்சி நாளாக  கொண்டாடப்பட்டு வருகின்றது.  இப்பிறந்தநாள் விழா, நாளை (24.08.2021) செவ்வாய்க்கிழமை, காலை 11.00 மணிக்கு சென்னை காட்டாங்குளத்தூர் S.R.M. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள T.P.கணேசன் அரங்கில், நடைபெற உள்ளது.

  இவ்விழாவில் கட்சியின் நிறுவனர் மாண்பமை டாக்டர் பாரிவேந்தர் M.P அவர்கள் கலந்துகொள்கிறார். கட்சியின் தலைவர் உயர்திரு. ரவிபச்சமுத்து அவர்கள் தலைமையில் நடைபெற உள்ள இவ்விழாவில், கட்சியின் முக்கிய தலைவர்கள் வாழ்த்துரை வழங்க உள்ளார்கள். இப்பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டு, நம் சீரமிகு தலைவரின் ஆசிகளை பெற வாருங்கள் என இந்திய ஜனநாயகக் கட்சியின் நிர்வாகிகளையும் – தொண்டர்களையும் அன்புடன் வருக.. வருக என அழைத்து மகிழ்கின்றோம்.

  அன்புடன்,

  பி.ஜெயசீலன்

  பொதுச்செயலாளர்

  இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)

  குறிப்பு:  நாளை (24.08.2021) காலை 11.00 மணிக்கு SRM பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள பிறந்தநாள் விழாவிற்கு. தங்களின் செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களை அனுப்பிவைக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்