• மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்படுள்ள பா.ஜ.க மூத்த தலைவர் திரு. இல. கணேசன் அவர்களுக்கு டாக்டர் பாரிவேந்தர் M.P, வாழ்த்து –

  தமிழக பாஜகவின் மூத்த தலைவரான இல. கணேசன், மணிப்பூர் மாநிலத்தின் 17-வது ஆளுநராக நியமிக்கப்படுள்ளதற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

       30 ஆண்டுகளாக பாஜக செயற்குழு உறுப்பினராக இருந்து வரும் இல.கணேசன் அக்கட்சியின் தேசிய தலைவராகவும், தேசிய துணைத் தலைவராகவும், தமிழக தலைவராகவும் பதவி வகித்திருக்கிறார். பா.ஜ.க அரசின் சார்பில், மத்தியப் பிரதேச மாநிலத்தின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராக இரண்டு ஆண்டுகள் பதவி வகித்தவர்.

  தன்னுடைய  பதவிக்காலத்தில்  மணிப்பூர் மாநிலத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருந்து, தமிழகத்தின் பெருமையை நிலைநிறுத்துவார் என நம்புகின்றோம். அவரின் பணி சிறக்க மீண்டும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

  வாழ்த்துக்களுடன்,

  டாக்டர் பாரிவேந்தர் M.P.

  பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி.