-
தெலுங்கானா ஆளுநர் திருமதி தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் தாயார் மறைவிற்கு - ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து அவர்கள் விடுத்திருக்கும் இரங்கல் செய்தி
காங்கிரஸ் மூத்த தலைவர் திரு.குமரி அனந்தன் அவர்களின் மனைவியும், மாண்புமிகு தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான திருமதி தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் தாயாருமான திருமதி.. கிருஷ்ணகுமாரி அவர்கள் இன்று அதிகாலை உடல்நலக்குறைவால் மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.
தாயை இழந்த துயரத்தில் உள்ள அன்புச் சகோதரி தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டு, தாயாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
வருத்தங்களுடன்,
ரவிபச்சமுத்து
தலைவர்
இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)