• சாதி, மத, இன, மொழி, பேதம் உள்ளிட்ட வேற்றுமைகளை களைந்து புதிய சமத்துவ சமுதாயம் உருவாக உழைப்போம் - டாக்டர் பாரிவேந்தர் M.P சுதந்திர தின வாழ்த்து

  உலக நாடுகளில் இந்தியா முன்னிலை வகிக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு ஆகும். 75-வது சுதந்திர தினத்தில் நமது நாடு முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது. நாட்டிற்கு கிடைத்த இந்த முன்னேற்றம் ஒவ்வொரு வீட்டிற்கும் கிடைக்கவேண்டும். 

  எல்லோரும் எல்லாமும் பெற்றிட, சகோதர நேசம் ஓங்கிட, உலக அரங்கில் இந்திய நாடு உயர்ந்திட, இந்திய மக்கள் அனைவரும் உழைத்திட இந்த 75-வது சுதந்திர தினத்தில் உறுதி ஏற்போம். நாடு முழுவதும் அமைதி நிலவ ஒற்றுமையுடனும், சகோதரத்துவத்துடனும் சாதி, மத, இன, மொழி, பேதம் உள்ளிட்ட வேற்றுமைகளை களைந்து புதிய சமத்துவ சமுதாயம் உருவாக உழைப்போம். இந்த இனிய சுதந்திர திருநாளில் நாட்டின் சுதந்திரத்திற்காக மிகக்கடினமாக பாடுபட்டவர்களையும் -  தியாகிகளையும் நினைத்து மரியாதை செய்து அவர்களின் புகழ் பாடுவோம்.

  உலகெங்கும் வாழும் இந்தியர்களுக்கு என் சார்பிலும், இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பிலும் எனது மனமார்ந்த சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

  வாழ்த்துக்களுடன்,

  டாக்டர் பாரிவேந்தர் M.P,

  பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி