• இந்திய திருநாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு - IJK தலைவர் ரவிபச்சமுத்து அவர்கள் விடுத்திருக்கும் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

  உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின்  சுதந்திரப் போராட்ட வரலாற்றில், நாட்டின் விடுதலைக்காக உயிர் நீத்த தியாகிகளை என்றும் நினைவில் நிறுத்தவேண்டிய நாள் ஆகஸ்ட்-15.

  75-வது இந்திய சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படும் இத்தருணத்தில், வருங்காலத்தில் நாடு முழுவதும் நதிகள் இணைக்கப்பட்டு விவசாயம் தழைக்கவும், தொழில் வளம் சிறக்கவும், கல்வி வளர்ச்சியில் உள்ள பாகுபாடுகள் களையப்பட்டு, கல்வியில் அனைவரும் சமமென மாற்றி அனைத்து சாதி, மத மக்களும் கல்வி மற்றும் மருத்துவத்துறையில் வளர்ச்சி அடையவும், இளைஞர்களுக்கு தேசபக்தி உணர்வினை ஊட்டி வேலை வாய்ப்புகளை உருவாக்கி இளைய சமுதாயம் மேன்மையுறச் செய்யவும், அவர்களுக்கு முன்னுரிமை அளித்து, மிகச்சிறந்த  வலிமையும் – வளமையும் கொண்ட நாடாக இந்தியா திகழ பாடுபடுவோம் எனக்கூறி, உலகெங்கும் வாழும் இந்திய மக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

  வாழ்த்துக்களுடன்,

  ரவிபச்சமுத்து‘

  தலைவர்

  இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)