• மதுரை ஆதீனம் ஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகள் மறைவிற்கு - ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து இரங்கல்

  புகழ்பெற்ற மதுரை ஆதீனத்தின் 292வது மடாதிபதி அருணகிரிநாத சுவாமிகள் இறைவனடி சேர்ந்தார் என்கிற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன்.

  சுவாசக் கோளாறு காரணமாக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சில நாட்களாக சிகிச்சை எடுத்துவந்த நிலையில், நேற்று இரவு இவ்வுலக வாழ்வை நீங்கி சிவலோக பதவி அடைந்துவிட்டார்.  292 ஆவது பீடாதிபதியாக 1980 ஆம் ஆண்டு குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீ ஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் (அருணகிரி) ஆதீனமாக பொறுப்பேற்றார். 77 வயதான இவர் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக மதுரை ஆதீன மடத்தின் பீடாதிபதியாக இருந்தவர். ராமேசுவரத்தில் நடந்த கச்சத்தீவை மீட்கும் போராட்டத்தில் 1985-ல் கலந்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தியவர். தமிழ் மொழி, சைவ நெறி பரப்புவதில் தீவிரமாக ஈடுபட்டவர்.

  இத்தகு சிறப்பு வாய்ந்த திரு.அருணகிரிநாத சுவாமிகளின் மறைவால் வாடும் ஆன்மீக பெருமக்களுக்கும் – நண்பர்களுக்கும் இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன்.

  வருத்தங்களுடன்,

  ரவிபச்சமுத்து

  தலைவர்

  இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)