• முன்னாள் அமைச்சரும் – அதிமுக அவைத்தலைவருமான திரு.மதுசூதனன் அவர்களின் மறைவிற்கு - டாக்டர் பாரிவேந்தர் எம்.பி. அவர்கள் இரங்கல்

    அதிமுகவின் அவைத்தலைவரும் அக்கட்சியின் மூத்த தலைவருமான மதுசூதனன், கடந்த சில மாதங்களாக, வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக, சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார் என்கிற செய்தியறிந்து மிகவும் துயருற்றேன்.

    திரு.மதுசூதனன் அவர்கள் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர். ஜெயலலிதா அவர்களின் அமைச்சரவையில் கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சராக பதவி வகித்தவர். கட்சியின் மூத்த  தலைவர் – 2007-ஆம் ஆண்டு முதல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அவைத்தலைவராக இருந்து தனது பணியை சிறப்புடன் வகித்து வந்தவர் திரு.மதுசூதனன் அவர்கள். அன்னாரின் மறைவால் துயருற்றிருக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் – கட்சித் தொண்டர்களுக்கும் - நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன்.

    வருத்தங்களுடன்,

    டாக்டர் பாரிவேந்தர், M.P,

    பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி.