• அதிமுக அவைத்தலைவரும், மூத்த அரசியல் தலைவருமான திரு.மதுசூதனன் அவர்களின் மறைவிற்கு ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து அவர்கள் இரங்கல்

  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த முன்னோடியும், அதிமுக-வின் அவைத்தலைவருமாகிய திரு.மதுசூதனன் அவர்கள் உடல்நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி இன்று  இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றோம்.

  மூத்த அரசியல் தலைவர் – முன்னாள் அமைச்சர் – 2007 ஆண்டு முதல் அதிமுக –வின் அவைத்தலைவர் என்ற பதவிகளை சிறப்புடன் வகித்து வந்தவர். அவரின் மறைவால் துயருற்றிருக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கும், அதிமுக தொண்டர்களுக்கும் – அவரின் நண்பர்களுக்கும் இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன்.

  வருத்தங்களுடன்,

  ரவிபச்சமுத்து

  தலைவர்

  இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)