• மத நல்லிணக்கமும் – மனித நேயமும் தழைத்தோங்கி நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச்செல்ல அயராது பாடுபடவேண்டும் - டாக்டர் பாரிவேந்தர் M.P, பக்ரீத் வாழ்த்து

    பகிர்ந்துண்ணும் பழக்கத்தையும் – தியாகத்தின் உன்னதத்தையும் உணர்த்தி தன்னலத்துக்காக பிறரை பலி கொடுக்கும் இந்த உலகத்தில் தான் பெற்ற ஒரே மகனான இஸ்மாயிலை தியாகம் செய்ய துணிந்த “இறைத்தூதர் இப்ராஹிம்” அவர்களின் புனிதமும் அர்ப்பணிப்பும் ஒருங்கே கலந்த வாழ்வையும் - தியாகத்தின் மேன்மையையும் போற்றும் நல்லதொறு நாள்தான் இந்த பக்ரீத் திருநாள்.

    இப்புனிதம் மிகுந்த தியாகப் பெருநாளில் இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவு கூர்ந்து அனைவரிடமும் சகோரத்துவத்தைப் பேணி – பசித்தோருக்கு உணவளித்து, அன்பு – கருணை – ஈகை ஆகிய நற்பண்புகள் மனதில் செழித்தோங்கி, ஏழை – பணக்காரன் என்ற வேற்றுமைகளை கலைந்து,  நாம் யாவரும் மனிதர்கள்தான் என்ற உயரிய சிந்தணையை எண்ணத்தில் தாங்கி, ஒருவருக்கொருவர் சகிப்புத்தன்மையுடன், இறைத்தூதர் காட்டிய வழியில் மத நல்லிணக்கமும் - மனித நேயமும் தழைத்தோங்கி நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல அனைவரும் பாடுபடவேண்டும் என உலகெங்கும் வாழும் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

    வாழ்த்துக்களுடன்,

    டாக்டர் பாரிவேந்தர் M.P,

    பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி