• IJK தலைவர் ரவிபச்சமுத்து அவர்கள் விடுத்திருக்கும் - ‘பக்ரீத்’ திருநாள் வாழ்த்துச் செய்தி

    இறைவனின் தூதரான இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும் (அரபி மாதம்) துல்ஹஜ் 10-ம் நாள், ‘ஹஜ் பெருநாள்  எனப்படும் பக்ரீத்’ போற்றிக் கொண்டாடப்படுகிறது.

    இறைப்பற்றிலும், கொண்ட கொள்கையிலும் உறுதியாக இருப்பவர்கள் இஸ்லாமியர்கள். மனிதருக்கு மனிதர் சுய தேவைகளை குறைத்து, சிறு தியாகங்கள் செய்து, பிறருக்கு உதவி, மத, மொழி, இனப் பாகுபாடுகளை அகற்றி, சமாதானம், சகோதரத்துவம், சகவாழ்வு என்று நபிகள் நாயகம் காண்பித்த நன்னெறியினை பின்பற்றி நாம் வாழவேண்டும்.

    "தியாகத் திருநாள்” எனப் போற்றப்படும் இந்த புனித பக்ரீத் பண்டிகை தினத்தில் (21.07.2021) மனிதர்களுக்கு அமைதியும், மகிழ்ச்சியும் நிரந்தரமாக கிடைக்கவும், நபிகள் நாயகத்தின் போதனையை மனதில் கொண்டு உலகெங்கும் சமத்துவம் நிலைத்திட, சகோதரத்துவம் தழைத்திட ஒற்றுமையுணர்வுடன் வாழ்வோம் எனக்கூறி, உலகெங்கும் வாழும் இஸ்லாமிய சகோதர – சகோதரிகளுக்கு என் மனமார்ந்த பக்ரீத் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

    வாழ்த்துக்களுடன்,

    ரவிபச்சமுத்து

    தலைவர்

    இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)